top of page

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் முன்னெடுக்கும்

"திருவள்ளுவர் சிலை" மற்றும்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" கல்வெட்டு நிறுவும் முயற்சி

Arrow Down

அறிமுகம்

tamil.jpg

நோக்கம்

தமிழ் மொழி மதங்கள் கடந்த இலக்கியங்களையும் காப்பியங்களையும் கொண்ட உயர்தனிச் செம்மொழி. உலகப்பொதுமறையாம் திருக்குறளையும், புறநானூறு போன்ற  செறிவு மிக்க நூல்களை எழுதிய ஞானிகளையும், அறிஞர்களையும் பெற்ற மொழி தமிழ் மொழி.

 

  • உலகத்தார் அனைவரும் ஏற்று செயல்படக்கூடிய கருத்துக்களைக் கொண்ட தமிழ் இலக்கியங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 

thiruvalluvar_edited.jpg

குறிக்கோள்

  • உலகப்பொதுமறை தந்த பொய்யா மொழிப்புலவர் திருவள்ளுவர் சிலையையும்

  • கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” கல்வெட்டையும் (ஐக்சிய நாடுகள் சபையில் பொரிக்கப்பட்டுள்ள மேற்கோள்)

 

சரியான இடத்தை தேர்வு செய்து நிறுவுவதே வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் அமைத்துள்ள டி-ஸ்கை குழுவின் குறிக்கோளாகும்.

periyakovil.jpeg

​தமிழர்கள்

தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இலங்கையில்  வாழ்ந்து வருகின்றனர்.  இந்திய மக்கள் தொகையில் 5.9 சதவிகிதம், இலங்கை மக்கள் தொகையில் 15 சதவிகிதம், மொரீஷியஷ் மக்கள் தொகையில்  6 சதவிகிதம், மலேசிய மக்கள் தொகையில் 7 சதவிகிதம், சிங்கப்பூர் மக்கள் தொகையில் 5% சதவிகிதம் தமிழர்கள் வாழ்கின்றனர்.  உலகில் மொத்த மக்கள் தொகையில் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 76 மில்லியன் ஆகும்.  இந்த நவீன யுகத்தில் தமிழர்களின் வரலாறு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகவும் பழமையான வரலாறு. 

இன்றளவில் சான் ப்ரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியில் மட்டும் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

valluvar-standing.jpg
valluvar-standing.jpg

வரலாறு

தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை உணர்தும் உயரிய கருத்துக்களைக் கொண்டவை.

  • திருவள்ளுவர்:

    • திருவள்ளுவர் ஒரு சங்க இலக்கியப்புலவர்.  அவர் இயற்றிய திருக்குறள் ஒரு மதசார்பற்ற மறை நூல். திருக்குறள்  கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 8 ஆம் நூற்றாண்டு வரை உள்ள இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. கலிபோர்னியாவின் பெர்க்கலி பல்கலைக்கழகத்தில் தமிழ் அறிஞரும் ஓய்வுபெற்ற தமிழ் மொழி பேராசிரியருமான ஜார்ஜ் எல். ஹார்ட் "திருக்குறள் என்ற தமிழ் இலக்கியம் எல்லாவிதமான மனித இருப்புதனை பட்டைதீட்டி கூர் பார்த்துவிட்டது எனலாம், மனித இருப்புதனை தொடாத இடமே திருக்குறளில் இல்லை என சொல்லலாம்", என்கிறார்.

கணியன் பூங்குன்றனார் :

  • கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர்.  "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்கிற உயரிய வரிகளுக்கு சொந்தக்காரர். உலக மக்கள் அனைவரையும் தம் சொந்தங்கள் என்னும் உலக நோக்கு சிந்தனைக் கருத்துகளை உள்ளடக்கிய இவரது மேற்கோள், ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்கப்பட்டுள்ளது. 

 

இடம்

 

சிலை மற்றும் கல்வெட்டு நிறுவுவதற்கான பொறுத்தமான இடங்களைத்  தற்சமயம் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் ஆய்ந்து வருகிறது.  தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் பல காரணிகளைக் கொண்டுள்ளது இந்த ஆய்வு.  மக்களின் ஆலோசனையையும் பங்களிப்பையும் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் அன்புடன் வரவேற்கிறது.

சான் ஃபிரான்சிஸ்கோ ஐக்கிய நாடுகள் சபையின் பிறப்பிடம். ஐக்கிய நாடுகளின் அமைப்பு அக்டோபர் 24, 1945 அன்று கலிபோர்னியாவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.

 

உலகளாவிய சகோதரத்துவம் மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான செய்திகளைக் கொண்டதால், திருவள்ளுவர் சிலை மற்றும் கல்வெட்டைக் கட்டியெழுப்ப சான் ஃபிரான்சிஸ்கோ ஒரு பொறுத்தமான தேர்வாக இருக்கலாம்.

ABOUT

1330

திருக்குறள்  மொத்த எண்ணிக்கை

380

அறம்

700

பொருள்

250

இன்பம்

PROJECTS

திட்டப்பணி

CONTACT

​தொடர்புகொள்ள

​விவரங்களுக்கு

உங்கள் கேள்விகளை info@sfbatm.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

முகவரி

P.O. Box 362329,

Milpitas, CA 95036-2329

Ph: 510-516-4312

தொடர்பு கொள்ள

Thanks for submitting!

bottom of page